அப்போது, அவரது உடலில் சாமி இறங்கியதாகக் சொல்லப்படுகிறது. வீட்டில் இருப்பவர்கள் சிலருக்கு அருள்வாக்கு சொல்லிவிட்டு பின் சுமார் 14 கி. மீட்டர் தூரம் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்தே ஆம்பூரை நோக்கி தனியாக ‘ஓம் சக்தி பராசக்தி, ஓம் சக்தி பராசக்தி’ என்று உச்சரித்துக் கொண்டே வந்துள்ளார்.
இறுதியில் சாலை ஓரம் இருந்த ஒரு வேப்பமரத்தடியில் சாமி ஆடியபடி நின்று கொண்டிருந்த, அந்த பெண்ணிடம் அப்பகுதியைச் சேர்ந்த சில மக்கள் பேச்சு கொடுத்தபோது, நான் அங்காள பரமேஸ்வரி வந்திருப்பதாகவும் மக்கள் தங்கள் குறைகளை கேட்கலாம் என்றும் நாக்கை நீட்டியவாறு கூறியுள்ளார்.
பாவிகள் அதிகரித்து விட்டனர். இன்று உலகம் முழுவதும் மக்களிடையே அதிகம் பரவி உள்ளது பொய், திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட தீய எண்ணங்களை, அழிக்கவே கடவுள்களால் உருவாக்கப்பட்டது இந்த நோய்க் கிருமி. மனிதனால் அழிக்க முடியாது. மனிதர்களாகிய நீங்கள் எங்கள் சினத்தை சீண்டி விட்டீர்கள்.
மனிதர்களை திருத்தவே இந்த நோய், உலகின் பரம்பொருள் ஈசன் என் அய்யன் சிவபெருமான் அவரால் உருவாக்கப்பட்ட சூட்சமம். இதனால் உலகத்தில் எங்கும் எங்களுக்கு எவ்வித பூஜையும் இல்லாமல் இருக்கின்றோம். எங்களுக்காக மனிதர்களை திருத்த நாங்கள் ஏற்படுத்திய நாடகம் இது.. இதுவும் என் அய்யன் ஈசன் பரம்பொருள் பரமேஸ்வரன் உத்தரவு மனிதர்கள் திருந்தவே இந்த உத்தரவு.
இந்த நோய் மூலம் உலகத்தை சமப்படுத்தி மனிதநேயம் காக்கப்படும். இன்னும்7 மாதங்கள் வரை யாராலும் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் 7 மாதத்திற்கு அல்லல் பட வேண்டும். இந்த ஏழு மாதங்களும் கடும் சோதனை துன்பங்கள் நடக்கும். இதுவே என் பரம்பொருள் ஈசன் அவர்களின் கட்டளை’ எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அவர் கையை நீட்ட, கையில் கற்பூரம் வைத்து பற்றவைக்கப்பட்டது. அதனை நாக்கில் வைத்து விழுங்கிய பின்னர், மஞ்சள் நீர் குடித்து விட்டு தனது ஆவேசத்தை தணித்து மயங்கி கீழே சரிந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.. சிலர் இது உண்மையா? என்றும், சிலர் வீட்டில் இருந்ததால் இப்படி ஆகி விட்டது என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
பாவிகளே நான் ஆத்தா பேசுறேன் 😱 7 மாதத்திற்குப் பிறகு உங்களை விடுவிப்பேன் 🤮 https://t.co/uyg3BNuj6d via @FacebookWatch
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) April 27, 2020