இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று இந்தோனேஷியாவில் லுமாஜாங் என்ற பகுதியில் உள்ள செமெரு எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த எரிமலை வெடிப்பானது கனமழை காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான குடியிருப்புகள் எரிமலையில் இருந்து கிளம்பிய நெருப்பு குழம்பால் சாம்பலில் மூழ்கியுள்ளது.
இதற்கிடையே அதிகாரிகள் பலரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 2 கிலோ மீட்டர் வரை இரண்டு முறையும், சனிக்கிழமை அன்று 11 கிலோ மீட்டர் வரை இரண்டு முறையும் சூடான எரிமலை குழம்பு வழிந்து ஓடியதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதேசமயம் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் சிலர் எரிமலை சீற்றம் தணிந்தது போல் தெரிந்ததால் மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்பி செல்ல தொடங்கினர். இந்த நிலையில் அதிகாரிகள் பொதுமக்கள் யாரும் உடனடியாக அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.