Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரு வாரத்திற்கு பிறகு… அனுமதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்… மகிழ்ச்சியடைந்த வியாபாரிகள்…!!

ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி, தேவிபட்டினம், மாரியூர், அரியமான் சேதுக்கரை, போன்ற கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் எதுவும் அனுமதிக்கபடாமல் இருந்துள்ளது.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் விதித்த தடையானது நேற்றுடன் முடிவடைந்துள்ளது. தற்போது தனுஷ்கோடி ராமேஸ்வரம் போன்ற கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு வாரத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபட்டுள்ளதால் அப்பகுதியில் கடை அமைத்துள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |