அமெரிக்காவில் 43 வயது பெண், ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் 43 வயது பெண் ஜெசிகா குட். கடந்த 9 ஆம் தேதி அன்று இவரது தோழிக்கு பிறந்த நாளாம். எனவே அங்கு சென்ற ஜெசிகா அதிகமாக மது அருந்தி நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது தான் அவர் மோசமாக நடந்திருக்கிறார்.
அதாவது நிகழ்ச்சியில் பங்கேற்ற 17 வயது சிறுவனை வற்புறுத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை 12 வயதான சிறுமி ஒருவர் பார்த்துள்ளார். எனவே இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜெசிகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.