லண்டனில் உள்ள கிரீன்வீச்சில் பெண் ஒருவர் 6-வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 8.30 மணிக்கு கிரீன்வீச்சில் உள்ள Barge Walk என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த பெண் கீழே விழுந்ததை பார்த்ததாகவும், அவர் எப்படி விழுந்தார் என்பது தெரியாது என ஒருவர் தகவல் அளித்துள்ளார். இந்த நிலையில் பெண்ணின் மரணம் குறித்து லண்டன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.