பிரான்சில் பெண் ஒருவர் செயற்கை நீரூற்றில் குளித்துக் கொண்டிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் கடந்த வியாழன்கிழமை அன்று பகல் 2 மணிக்கு பெண் ஒருவர் place de la republique எனும் பகுதியில் அமைந்துள்ள நீரூற்று ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் மேல் உள்ள சந்தேகத்தால் அவரை அங்கிருந்து வெளியேறி செல்லும்படி கூறியுள்ளனர். அந்த சமயத்தில் அப்பெண் பை ஒன்றில் வைத்திருந்த யூரோ தாள்களை எடுத்து தூக்கி வீசியுள்ளார். மேலும் அங்கு 50,20,10 என பல யூரோ தாள்கள் சிதறி கிடந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து அங்கு சிதறிக்கிடந்த யூரோ தாள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணிடம் மொத்தம் 50,000 யூரோ தாள்கள் இருந்ததாகவும், அதில் 47,200 யூரோ தாள்களை மட்டுமே காவல்துறையினர் கைப்பற்றிள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள யூரோ தாள்கள் நீரூற்றில் உள்ள வடிகாலுக்குள் சிக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.