மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறி பெண்ணின் உடலை கணவனிடம் ஒப்படைத்த பின் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில் உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு அமெரிக்க நாடான பராகுவேயில் வசித்து வரும் கிளாடிஸ் ரோட்ரிக்ஸ் டி டுவர்டே (gladys rodriguez de duarte) என்பவர் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து உடனே டுவர்டே வை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு மிகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், டுவர்டே இறந்து விட்டதாக மருத்துவர் heriberto vera கூறியதோடு, இறப்பு சான்றிதழையும் வழங்கினார்.
இதையடுத்து அவரது கணவர் குடும்பத்தோடு மனைவியின் சடலத்தை எடுத்துக்கொண்டு, இறுதிச்சடங்கு கூடத்துக்கு சென்றார். அப்போது அவரது உடலை தகனம் செய்யும் போது திடீரென, உடல் அசைவுகளோடு கண் விழித்து எழுந்தார்.
இதனை பார்த்து குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்து பார்த்தபோது உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிய வந்துள்ளது. இதனிடையே மருத்துவர் heriberto vera மீது டுவர்டே வின் கணவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், எனது மனைவிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காமல் அவசர அவசரமாக அவர் இறந்துவிட்டார் என அறிவித்தார்கள். அதோடு அவர்கள் சடலம் எனக்கூறி நிர்வாண நிலையில் ஒரு நாயை கொடுப்பது போல என்னிடம் தந்தனர் என கூறியிருந்தார்.
இது குறித்து heriberto vera மற்றும் சக மருத்துவர்கள் கூறுகையில், டுவர்டேவை காப்பாற்ற முயன்றும் அது தோல்வி அடைந்தது. அவரின் நாடித்துடிப்பை கண்டுபிடிக்கமுடியவில்லை. நாங்கள் வேண்டுமென்று தவறு செய்யவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளனர்.