சமையலுக்கு விறகு கட்டை எடுக்க சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாமிசெட்டிபட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகவர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு கடகத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகவர்ஷினி வீட்டில் சமையல் செய்வதற்காக விறகு கட்டைகளை எடுக்க சென்ற போது அங்கு பதுங்கி இருந்த பாம்பு அவரை கடித்துள்ளது.
அதனால் மயங்கி விழுந்த மேகவர்ஷினியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மேகவர்ஷினி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.