Categories
தேசிய செய்திகள்

40 வருடங்கள் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய பெண் துணை மேயராக தேர்வு… குவியும் வாழ்த்து….!!!!!

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், பாஜக எதிர்க்கட்சியாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பீகாரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் கயா மாநகராட்சியில் சிந்தாதேவி என்ற பெண் துணை மேயராக வெற்றி பெற்றுள்ளார்.

இவர் கடந்த 40 வருடங்களாக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், சில வருடங்கள் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் தற்போது துணை மேயர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நபரை விட 27,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்று அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு சிந்தாதேவிக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |