பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று கூறிய கிராமத்தினரின் எச்சரிக்கையை மீறி அம்மாவின் நம்பிக்கையுடன் சென்ற இளம்பெண் சாதனை படைத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தை சேர்ந்தவர் பிராஜு என்பவர்.இவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகளும் ,ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு மும்பையில் கட்டுமான வேலை செய்யும் போது ஏற்பட்ட மின்சார விபத்தால் இவரது கால் விரல்களை இழந்தார். இதனால் இவர் சில ஆண்டுகளுக்கு எந்த வேலையும் செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தந்தை படுத்த படுக்கையாய் ஆனதால் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்துள்ளது. இதனை எண்ணி வருந்திய அவரது 19 வயது மகள் முனிட்டா குடும்ப கஷ்டத்தை போக்குவதற்காக நடை பந்தயத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி அந்த பகுதியில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த ராணுவ ஒருவரை சந்தித்து பேசினார்.
அவர் முன்னிட்டவிருக்க முறையான பயிற்சி அளித்தார். இந்நிலையில், குவஹாத்தியில் நடந்த நடை பந்தய போட்டியில் 10000 மீட்டரை 47:53:58 நிமிடங்களில் கடந்து முனிட்டா தேசிய அளவில் சாதனை படைத்து அசத்தியுள்ளார். இதுகுறித்து முனிட்டா தெரிவித்ததாவது, குடும்ப வறுமையைப் போக்க வேண்டும் என்று நடை பந்தயம் போட்டியில் கலந்து கொண்டேன்.பெண் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப கூடாது என்று ஊர்காரர்கள் என் குடும்பத்தை எச்சரித்தனர்.
ஆனால் எனது அம்மா என் மகள் ஒரு நாள் சாதிப்பாள் என்று கூறி நம்பிக்கை வைத்து என்னை அனுப்பி வைத்தார். போபாலுக்கு என்னுடன் வரவேண்டும் என்று என் அம்மா அடிக்கடி கூறுவார். ஆனால் அவர் விமானநிலையத்திற்கு கூட வந்ததில்லை. ஆகையால் நான் விரைவில் ஒரு நல்ல வேலைக்கு சென்று எனது பெற்றோரை விமானத்தில் அழைத்து செல்வேன். இதுதான் எனது ஆசை எனத் தெரிவித்தார்.