Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் அரட்டை…. திடீரென வந்த சத்தம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்….!!

மின்னல் தாக்கியதில் வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள கீழப்புதூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக செம்மடைப்பட்டி வரை சென்றுள்ளார். அங்கு ராஜேந்திரன் அவருடைய நண்பர்களான அழகுபாண்டி, செல்வம் ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென மிகுந்த சத்தத்துடன் இடியும் மின்னும் தாக்கியுள்ளது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆனால் அருகிலிருந்த அழகுபாண்டியும் செல்வமும் மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |