தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கோம்பை சாலை தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் தோட்ட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்துவின் மனைவி லட்சுமி சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் மிகவும் மனைமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து லட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது விரக்தியடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையறிந்த அவரது கணவர் லட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.