ஜம்மு காஷ்மீரில் மண்சரிவில் இரவெல்லாம் சிக்கிக் கிடந்த இளைஞரை பாதுகாப்பு படையினர் மீட்டனர் .
ஜம்மு காஷ்மீரில் ரம்பான் மாவட்டம் லூட்பால் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் நேற்று இரவு மேகத் சாலை வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது பெய்த பலத்த மழையினால் சாலையை ஒட்டி இருந்த மலையிலிருந்து மண்ணும் பாறையும் சரிந்து விழுந்தது. இதற்குள் பிரதீப் குமார் சிக்கிக்கொண்டார் . பின் இரவு முழுவதும் மண்ணுக்குள் சிக்கித் தவித்தார் பிரதீப் குமார். இதையடுத்து , காலையில் பாதுகாப்பு படையினர் மோப்ப நாயுடன் அந்த சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோப்பநாய் பலமாக குரைத்தது . இதனால் சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர் மணல் குவிந்ததிருந்த இடத்தை மெல்ல மெல்ல தோண்டி பிரதீப் குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . இதன்பின், தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் மண் சரிவால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது . இதேபோல் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் அஃதுகுவாரிபவன் பாதையும் மண்சரிவால் மூடப்பட்டுள்ளது