மன உளைச்சலால் வாலிபர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு மாங்காடு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் 6 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து விக்னேஷ் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் தனது வீட்டில் வைத்து பூச்சி மருந்தை குடித்து மயங்கி கீழே கிடந்துள்ளார். அதன் பின் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.