பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியான சுந்தர் நகரில் வேதாரண்யத்தைச் சேர்ந்த முரளி என்ற இளைஞர் அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். சிறுவாச்சூர் பகுதியிலுள்ள எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர், தனது குடும்பத்திலுள்ள பிரச்னைகளை தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் முரளி, தான் தங்கியிருந்த அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை பணி முடிந்து அறைக்குத் திரும்பிய அவரது நண்பர்கள், முரளி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவ்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் முரளியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.