Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் “இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு” இளைஞன் தற்கொலை முயற்சி..!!

சென்னை ரயில் நிலையத்தில் இளைஞன் ஒருவன் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்   

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், அதே ஊரை சேர்ந்த தேன் மொழி என்ற இளம்பெண்ணும் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அப்பெண்ணை வெட்டினான். கழுத்தில் காயம் பட்ட அப்பெண் கீழே விழுந்தார். இளம்பெண்ணை வெட்டிய பிறகு அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் ரயிலில் அடிபட்டு அவருக்கும் காயம் ஏற்பட்டது.

Related image

இந்த சம்பவத்தில் கழுத்தில் காயம் பட்ட பெண் கீழ் பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதே போல காயமடைந்த இளைஞனும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு இதே போல நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண்ணை ராம்குமார் என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |