சாலையில் கிடந்த மின் கம்பியை மிதித்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கநந்தல் இப்பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக மட்டுமின்றி விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஜெயவாணி என்ற மனைவியும் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுரேஷ் திடீர்குப்பம் பகுதியில் இருக்கும் தன்னுடைய பாக்கு தோப்புக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாரா விதமாக செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சுரேஷ் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக ஜெயவாணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.