Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை… 29 வயது இளைஞர் கைது…!!

குடிபோதையில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள ஆரிக்கான் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ், இவருடைய மகன் ராகுல்(29). இவருக்கும் இவரது தந்தை கோவிந்தராஜிற்கும் நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ராகுலை அவரது தந்தை வீட்டினுள் வைத்து பூட்டி உள்ளார். குடிபோதையில் இருந்த ராகுல் நள்ளிரவில் வீட்டின் ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேவந்துள்ளார்.

இதையடுத்து, அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் 65 வயதான மூதாட்டி வீட்டிற்குச் சென்று ஊறுகாய் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனை அடுத்து, மூதாட்டி வீட்டிற்குள் சென்ற நேரம் பார்த்து அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் ராகுல். பின்னர், மூதாட்டியின் உடைய சத்தத்தைக் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள், ராகுலை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் பற்றி ஜோலார்பேட்டை காவல் துறையினர் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |