Categories
உலக செய்திகள்

யாரும் தொட முடியாத உச்சம்… ‘ஜெட் பேக்’ சாதனை நிகழ்த்திய இளைஞர்… சாகச வீடியோ..!!

இதுவரை யாரும் பறக்காத உயரத்தை ‘ஜெட் பேக்’ எனப்படும் நவீன இயந்திரம் மூலம்  இளைஞர் ஒருவர் எட்டி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அடிக்கடி சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வந்தாலும் தற்போது புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, காற்றை உள்ளிழுத்து பின் அதிவேகமாக வெளித்தள்ளும் ஜெட் பேக் இயந்திரம் மூலம் ஒவ்வொருவரும் அதிக தூரம் சென்று சாதனை நிகழ்த்த வேண்டும் என பயிற்சி செய்து வருகின்றனர்.

Image result for A young man has reached a height the jet pack in dubai .

அந்த வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்ஸ் ராபெஃட் என்பவர் ஜெட் பேக் மூலம் அடிக்கடி பறந்து வருகின்றார். இந்நிலையில் துபாய்  சென்றிருந்த அவர், அங்கு பட்டத்து இளவரசர் முகம்மத் பின் மக்தூம் (Mohammed bin Rashid Al Maktoum) முன்னிலையில் பறக்கத் தொடங்கினார்.

Image

மணிக்கு 250 கி. மீட்டர் வேகத்தில் அவர் பறந்து, புதிய உச்சமாக சில நொடிகளிலேயே 6,000 அடி உயரத்தைத் தாண்டிச் சென்றார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து மெர்சலாகி விட்டனர். இதுவரையில் ஜெட் பேக் முறையில் யாரும் இந்த உச்சத்தை தொட்டதில்லை. யாரும் தொடாத உயரத்தை தற்போது வின்ஸ் பிடித்துள்ளார். இந்த ஜெட் பேக்கை சுயமாகவும், தரையிலிருந்து ரிமோட் மூலமும் இயக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |