Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஐயோ இப்படியா நடக்கணும்… வாலிபருக்கு நடந்த எதிர்பாரா சம்பவம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்கீரனூர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவரும் இணைந்து சேலம் மாவட்டத்தில் தலை வாசல் அருகில் அமைந்திருக்கும் மும்முடியில் எலக்ட்ரானிக்கல் கடை நடத்தி வருகின்றனர். இதில் வெங்கடேஷ் நாள்தோறும் மகேந்திரனுடன் காரில் கடைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கமாக வைத்துள்ளார்.

ஆனால் மகேந்திரன் வெளியூர் சென்றிருந்ததால் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் மும்முட்டிக்கு சென்றுவிட்டு வியாபாரம் முடிந்ததும் இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு ஏரியின் அருகில் வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக திடீரென எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |