Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓட்டப்பயிற்சி செய்து கொண்டிருந்த விக்னேஸ்வரன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்….!!

ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட இளைஞர் கார் மோதி உயிரிழந்தார். குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் ராஜகம்பீரம் அருகே விக்னேஸ்வரன் அதிகாலைப் பொழுதில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மானாமதுரை நகர் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் அதன் ஓட்டுனரை தேடி வரும் நிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூறு முடிவுற்ற நிலையில் தப்பியோடிய குற்றவாளியை கைது செய்ய கோரி விக்னேஷ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |