தனது ஆட்டை காப்பாற்ற சென்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் அருகாமையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது தண்டவாளத்தில் அவரது ஆடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்நேரம் அவ்வழியாக ரயில் ஒன்று வந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் உடனே அந்த ஆட்டை காப்பாற்ற முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.