வேலூர் மாவட்டத்தில் சிறுமியை ஏமாற்றிய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கஸ்பா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜுன் 18 – ஆம் தேதியன்று 17 – வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு சுகாதார ஊழியர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன் பிறகு தாய் மட்டும் குழந்தையை குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனை அடுத்து தாய் மற்றும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு 17 வயது பூர்த்தி அடையவில்லை என்பதையும், மேலும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதையும் அறிந்து கொண்டனர். அதன்பிறகு மருத்துவமனை சார்பில் மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன்பின் இளம்பெண் அளித்த பகீர் வாக்குமூலத்தினால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து கஸ்பா பகுதியில் வசிக்கும் இர்பான் என்பவர் இந்த சிறுமியை காதலிப்பதாக கூறி தனிமையில் அழைத்து சென்று ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் தரித்த தற்போது குழந்தை பெற்றிருப்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இர்பானை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.