தேனி அருகே திருமண ஆசை வார்த்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியை அடுத்த பால்பண்ணை தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன். 28 வயதாகும் இவர் மேடை அலங்காரம் தொழில் சொந்தமாக செய்து வருகிறார். நல்ல வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கும் இவர் தான் செட்டில் ஆகிவிட்டதாகவும், விரைவில் உன்னை உங்கள் வீட்டு பெரியோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரங்கநாதனுக்கு அவரது வீட்டில் பெற்றோர்கள் வேறொரு பெண்ணை நிச்சயிக்க திட்டமிட, இது குறித்து அறிந்த சிறுமி விரக்தியடைந்து தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின் சிறுமியின் பெற்றோர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் ரங்கநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.