புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கடந்த 31ஆம் தேதி இரவு முதல் காணாமல் போயுள்ளார்.. அதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.. ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.. இதையடுத்து ஏம்பல் காவல் நிலையத்தில் தங்களது மகள் காணாமல் போய்விட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், சிறுமியை காவல் துறையினர் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்தநிலையில் தான் அந்த சிறுமி ஏம்பல் கிளவி தம்மம் குளத்துக்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரியில் நேற்று ஆடைகள் களையப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.. அவரது உடலில் பல இடங்களில் காயங்களும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளமும் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஏம்பல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர், அந்த சிறுமியின் உடல், உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
சம்பவ இடத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி ஒரு வீட்டிற்குள் சென்று படுத்துக் கொண்டது.. இதனால், அந்த சிறுமியை அந்த வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொடூரமாக கொன்று விட்டு இங்கு உடலை வீசி சென்று இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் காவல்துறையினரிடம் கூறுகையில், சிறுமியை ஒரு இளைஞர் கறம்பவயல் காளிகோவில் பக்கம் அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர். அதன்பேரில், அந்த 27 வயது இளைஞரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதை அந்த இளைஞர் ஒப்பு கொண்டார்.. மேலும் இச்சம்பவம் தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://twitter.com/BigilMahe97/status/1278559224058966023