திருவள்ளுர் அருகே கஞ்சா போதையில் இரண்டு குழந்தைகளை கடத்தி சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் ஏரி மேட்டை சேர்ந்த வீரன் என்பவரது பிள்ளைகளான தனுஸ்ரீ, அருண் ஆகியோர் நேற்று வழக்கம் போல் அனுப்பம் பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் தான் உங்களை பள்ளியில் இறக்கி விடுகிறேன் என்று கூறி லிப்ட் கொடுத்துள்ளார். அதை நம்பி அந்த இரு குழந்தைகளும் பைக்கில் ஏறியுள்ளனர்.
இதையடுத்து அவர் அவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது பள்ளிக்கூடத்தையும் தாண்டி சென்றதை அங்கிருந்த சக மாணவர்கள் பார்த்து ஆசிரியரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, காவல்துறையினரும் கிராமங்களும் அப்பகுதியை சுற்றி தேடினர். பின்னர் 3 மணி நேரம் கழித்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை கிராம மக்கள் கண்டு குழந்தைகளை மீட்டனர்.