Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருமானமில்லை… “ஒரேவழி கொள்ளை தான்”…. இளைஞரை திருடனாக மாற்றிய ஊரடங்கு..!!

ஊரடங்கு காலத்தில் போதிய வருமானம் இல்லாததால் வீடுகளில் கௌபார் (cowbar) எனப்படும் இரும்பு ராடைப் பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பூந்தமல்லி அடுத்துள்ள நசரத்பேட்டை, மேப்பூர் பகுதியில் வசித்து வரும் சிவராஜா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டிவி, கண்காணிப்புக் கேமரா, லேப்டாப் ஆகியவற்றைக் கொள்ளையடித்து விட்டுச் சென்றார்.. இந்தச் சம்பவம் குறித்து வீட்டில் பதிவான கண்காணிப்பு கேமராவின் காட்சிகளைக் கொண்டு நசரத்பேட்டை போலீசார் கொள்ளையனைத் தேடிவந்தனர்..

இந்தநிலையில் பூந்தமல்லி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 29 வயது இளைஞரான அப்பு என்ற அப்பன் ராஜ்  என்பவரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.. இந்த விசாரணையில், கொரோனா ஊரடங்கு நேரத்தில் போதிய வருமானம் ஏதுமில்லை.. இதனால் வரும் வழியில் வீட்டுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக்கை திருடிக்கொண்டு, பின் சிவராஜாவின் வீட்டின் பூட்டை, இரும்புக் கம்பிகளை வளைக்க பயன்படுத்தும் கவ்பாரையை வைத்து உடைத்து கொள்ளையடித்தேன் என ஒப்புக்கொண்டார்..

மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும்போது யாராவது தடுக்க முயன்றால் அவர்களை இரும்புக் கம்பியால் தாக்கவும் உதவியாக இருக்கும் என்றும் கூறி அதிர வைத்துள்ளார்.. இவரிடமிருந்து பைக், டிவி, கண்காணிப்புக் கேமரா, லேப்டாப், கவ்பார் ஆகியவற்றை நசரத்பேட்டை போலீசார்  பறிமுதல்செய்தனர்.. ஏற்கனவே இவர் மாங்காட்டில் கொள்ளையில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |