17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள நாரணம்மாள்புரம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் 17 வயது சிறுமியை சில நாட்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அந்த சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.