Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்…. இயக்குனர் சீனு ராமசாமி அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ”நீர்ப்பறவை”. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார்.

இவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், நந்திதா தாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், 10 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைதளபக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும், நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப்பெருமக்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |