Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆபாச புகைப்படம் அனுப்பிய ஊழியர்…. தாய்-மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி ஊழியர் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் அஸ்வின் விக்னேஷ் என்பவர் இளம்பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த அஸ்வின் விக்னேஷ் இளம்பெண்ணின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்துள்ளார்.

மேலும் இளம்பெண்ணின் தாயாருக்கும் அஸ்வின் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த இளம்பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஸ்வின் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |