ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 5 வாலிபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்துள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங் செய்வது தொடர்ந்து வருகிறது. இதுபோல் ஆபத்தான முறையில் தலைகவசம் அணியாமல் பைக் ரேஸ் செய்வதால் விபத்தில் பலரும் உயிரை இழக்கும் வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகத்தில் தலைகவசம் அணியாமல் சாகசம் செய்த 5 வாலிபர்களை போலீசார் பிடித்தனர்.
இதனையடுத்து அவர்களுக்கு விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் கை, கால்களை இழந்து தவிக்கும் நபர்களின் வீடியோ காட்சியை கண்பித்து விழிப்புணர்வு அளித்துள்ளனர். மேலும் 5 வாலிபர்களையும் தஞ்சாவூர் அண்ணாசாலை பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து இனிமேல் இதுமேல் இருசக்கர வாகத்தில் தேவையற்ற சாகசம் செய்ய மாட்டோம் என வாக்குமூலம் வாங்கிக்கொண்ட போலீசார் 5 வாலிபர்களுக்கும் அபராதம் விதித்துள்ளனர்.