ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள விபிஷ்ணபுரம் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர்ராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கும்பகோணத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுந்தர்ராஜனின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு பதற்றமடைந்த சுந்தர்ராஜன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது பீரோவில் இருந்த முப்பத்தி மூன்று பவுன் தங்க நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இது பற்றி சுந்தர்ராஜன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.