ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள ராணி மஹால் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்பின் இருவரும் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய வெள்ளி பொருட்கள், 8000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 4 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது பற்றி கார்த்திக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.