இந்திய நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணம் ஆகும். இந்த ஆதார் அட்டை தற்போது அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் தேவைப்படுவதால் அதை கவனத்துடன் கையாள்வது அவசியம். இந்த ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் இருக்கும் நிலையில் அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்வதற்கு ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி கண்டிப்பாக வேண்டும்.
இதனால் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்ட செல்போன் நம்பரை பத்திரமாக வைத்திருப்பது அவசியம். அதன் பிறகு ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களை மாற்றும் போது கவனத்துடன் மாற்றுவது அவசியம். இந்நிலையில் ஆன்லைன் மூலமாக ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செல்போன் நம்பரை எப்படி மாற்றலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் https://ask.uidai.gov.in/என்ற அதிகாரப்பூர்வ ஆதார் இணையதள பக்கத்திற்குள் செல்ல வேண்டும்.
அதன் பிறகு மொபைல் நம்பர் மற்றும் கேப்சா போன்ற விவரங்களை உள்ளீடு செய்து ஓடிபி நம்பரை பயன்படுத்தி ஆதார் அப்டேட் பகுதிக்குள் சென்றால் மாற்றம் செய்யப்பட வேண்டிய பகுதி இருக்கும். அதில் What you want To update என்ற கட்டம் இருக்கும். அதில் செல்போன் நம்பர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதனையடுத்து மொபைல் நம்பர் மற்றும் கேப்சா போன்றவற்றை உள்ளீடு செய்து ஓடிபி நம்பரை பதிவு செய்து சேவ் அண்ட் ப்ரொசீடு கொடுத்து ஆதார் மையத்தின் நேரத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேலும் அதில் குறிப்பிடப் பட்டுள்ள ஆதார மையத்திற்கு சென்று முடித்துக் கொள்ள வேண்டும்.