சென்னையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் 10 அரசு மையங்ளும், 13 தனியார் மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என அனைத்து தனியார் ஆய்வகங்களுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு வரும் நபர்களின் பெயர், முகவரி, கைப்பேசி எண், ஆதார் எண் உட்பட முழு விபரங்களையும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஆதார் எண்ணை பதிவு செய்வதன் மூலம் தொற்று உறுதியானவர்களை எளிதில் கண்காணிக்க இயலும். ஆதார் இல்லாதவர்களுக்கு சோதனை செய்தால் முடிவு வரும் வரை தனிமைப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும். சோதனை செய்ய வரும் நபர்களின் முழு விவரங்களையும் தனியார் ஆய்வகங்கள் பெற வேண்டும். தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்தவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானவர்கள் தங்களை தனிமைப்படுத்தாமல் உள்ளதாக தனிமைப்படுத்தாமல் உள்ள சிலரால் தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.