தமிழக அரசு நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
தனி மனித இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் டிஜிபி உத்தர விட்டது போல முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
மதுபானக் கடைகளின் பார்களை திறக்கக் கூடாது.
மூன்று நாளைக்கு ஒருமுறை ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே விற்க வேண்டும்.
மதுவங்குவோரின் பெயர், முகவரி, ஆதார் தரப்பட வேண்டும்.
ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் நடைமுறை கொண்டு வர வேண்டும்.
ஆன்லைன் மூலம் வாங்குவோருக்கு இரண்டு மது பாட்டில் வழங்கலாம்.
டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட வில்லை என்றாலும் அது எப்படி செயல்படுகின்றது என நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும்.
நீதிமன்ற உத்தரவு மீறப்படுமானால் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட நேரிடும் என்ற எச்சரிக்கையும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றார்.