ஆதாரில் உள்ள சில பிழைகளை நீங்கள் வீட்டிலிருந்து மாற்றிக் கொள்ளலாம்.
தற்போது ஆதார் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் அதில் இருக்கும் தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டைகள் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்பது இல்லை. நாம் நமது வீட்டில் இருந்தே சில விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். அதாவது ஆன்லைன் சேவையின் மூலம் உங்கள் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றை புதுப்பிக்கலாம்.
இந்நிலையில் உங்கள் பெயரில் உள்ள சிறு திருத்தங்களை மட்டுமே வீட்டிலிருந்து மாற்ற முடியும். முழு பெயரையும் மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் சேவை மையங்களுக்கு தான் செல்ல வேண்டும். அதாவது உங்களது ஆதாரில் முத்துலட்சுமி உள்ளது என்றால், அதை நீங்கள் முத்துலெட்சுமி என்று மாற்றிக் கொள்ளலாம். மேலும் பெயர் பகுதிகளுக்கு இடையே உள்ள இடைவெளியை சேர்க்கவும், இனிஷியல் போடு பெயர் இருந்தால் அதை விரிவாக்கவும் முடியும். இதனையடுத்து திருமணமான பெண்கள் அவர்களது தந்தை பெயர் இருக்கும் இடத்தில் கணவர் பெயரை மாற்றிக் கொள்ளலாம். மேலும் மாற்ற விரும்பும் பெயர் சரியாக பொறிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க ஏதாவது ஒரு நகலை ஸ்கேன் செய்ய வேண்டும். இந்நிலையில் ஆதாரின் விவரம் மாற்றத்திற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதனை நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து நேரடியாகவே செலுத்திக் கொள்ளலாம். இந்த சேவையை பயன்படுத்தும் போது உங்கள் மொபைலில் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், அதேபோல் அந்த என் செயலில் உள்ளதா, ஓடிபி வரும் நிலையில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.