ஆதார் அட்டையில் உள்ள உங்கள் புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக எப்படி மாற்றுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
ஆதார் என்பது ஒரு மனிதனின் அடையாளம். UIDAI யை வழங்கிய 12 இலக்க அடையாள என்னாகும். இப்போது உங்கள் புள்ளி விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவை கொண்டிருப்பதால் குறிப்பிட்ட அளவு அடையாள ஆவணங்களில் ஒன்றாக இந்த ஆதார் அட்டை மாறி உள்ளது. இந்த அட்டையில் உள்ள பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள், புகைப்படம் மற்றும் விவரங்களும் அடங்கும்.
ஆதார் அட்டை மிக முக்கிய அரசாங்க அடையாள சான்றுகளில் ஒன்றாக தற்போது உள்ளது. ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்ய உங்கள் விவரங்களை சுயசேவை புதுப்பிப்பு போர்டல் மூலம் புதுப்பிக்க UIDAI அதிகாரபூர்வ வலை தளத்தை பார்வையிட வேண்டும்.
புகைப்படத்தை எப்படி மாற்றுவது:
நீங்கள் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற விரும்பினால் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தை பார்வையிடவும்.
தேவையான மாற்றத்திற்கு குறிப்பிட்ட படிவங்களை பின்பற்ற வேண்டும்.
உங்கள் படிவத்தை நிர்வாகியிடம் சமர்ப்பித்து உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை வழங்குவோம்.
நிர்வாகி உங்கள் நேரடி புகைப்படத்தை எடுப்பார். மேலும் உங்கள் விவரங்களை அங்கீகரித்து நீங்கள் பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும். இதற்கு 25 கட்டணம் வழங்கப்பட வேண்டும்.
யுஆர்என் கொண்ட ஒப்புதல் சீட்டையும் பெறுவீர்கள்
ஆதார் புதுப்பிப்பு நிலையை சரிபார்க்க புதுப்பிப்பு கோரிக்கை எண் (யுஆர்என்) பயன்படுத்தப்படலாம்
புதிய ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கான உங்கள் கோரிக்கை செயல்படுத்தப்பட்ட பின்னர், அதை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம்.
முதலில் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையைப் பதிவிறக்க UIDAI போர்ட்டலைப் பார்வையிட வேண்டும்
சாதாரண ஆதார் அட்டை அல்லது masked ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வதற்கான விருப்பமும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
புதுப்பித்தலுக்குப் பிறகு mAadhaar செயலியில் உங்கள் ஆதார் விவரங்களையும் புதுப்பிக்க வேண்டும்
மேற்கூறிய வழிகளைப் பின்பற்றினால், 15 முதல் 20 நாட்களுக்குள் ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படம் மாற்றம் செய்யப்பட்டு விடும்.