ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டது. அரசு சலுகைகள், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை என்பதால், அம்மாநில மக்கள் அனைவருக்கும் ஆதார் பதிவை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதன் முதற்கட்ட பணிகளாக ஜம்மு- காஷ்மீர் முழுவதும் அடுத்த வாரத்திற்குள் அதிகளவிலான பொது சேவை மையங்களை திறந்து பணிகளை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.