Categories
தேசிய செய்திகள்

ஆதார் அப்டேட்… இனி எல்லாம் ஈசிதான்… ஹேப்பி நியூஸ்..!!

இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஆதாரம் என்பது ஆதார் அட்டை. ஆதார் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு  நாடு முழுவதும் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல் சிறுவர்களுக்கும் தனி ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் ஆதார் கார்டும் இருக்கிறது. இந்நிலையில், இனி தபால் அலுவலகத்திலேயே ஆதார் கார்டு வாங்கிக்கொள்ளலாமென அரசு அறிவித்துள்ளது.

ஆதார் கார்டு வாங்க விண்ணப்பிப்பது ஆதார் விவரங்களை மாற்றுவது போன்ற சேவைகளை இனி தபால் அலுவலகத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
முதற்கட்டமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இத்திட்டம் அமலுக்கு வந்தது. இதையடுத்து படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் இ சேவை தொடரும் என்று அறிவித்துள்ளது. அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் தபால் அலுவலகத்தில் ஆதார் சேவைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. அருகில் தபால் அலுவலங்கள் இல்லாதவர்கள் ஆன்லைனில் ஆதார் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும். தனிநபர் விவரங்களை மாற்ற வேண்டுமானாலும் ஆன்லைனில் மாற்றிக் கொள்ள முடியும்.

Categories

Tech |