ஜெர்மனை சேர்ந்த ஆடி கார் உற்பத்தியாளர் நிறுவனம் இந்தியா முழுக்க 60 நகரங்களில் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கட்டமைத்துள்ளது. மேலும் ஆடி கார் விற்பனை மையங்கள், வொர்க்ஷாப் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் விற்பனை மையங்களில் பாஸ்ட் சார்ஜர் முறையை அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நம் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஆடி பாஸ்ட் சார்ஜிங் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து ஆடி விற்பனை மையங்களிலும் 22 k watt சார்ஜர் என்ற முறையை இன்ஸ்டால் செய்துள்ளது மேலும் 16 விற்பனை மையங்களில் 50 k watt DC பாஸ்ட் சார்ஜரும் பொருத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலக அளவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் ஆடி இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார் மாடல்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஆடி நிறுவனம் ஈ டிராகன் ஸ்போர்ட் பேக், ஈ டிராகன் எஸ் யு வி, ஈ டிராகன் ஜி டி, ஆர் எஸ் டிராகன் ஜி டி போன்ற மாடல்களை விற்பனை செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இது குறித்து ஆடி நிறுவன தலைவர் பால்பிர் சிங் திவான் கூறியதாவது “மாற்று எரிசக்தி கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய நாங்கள் திட்டம் இட்டு இருக்கிறோம். மேலும் நாடு முழுக்க சுமார் 100க்கும் மேற்பட்ட சார்ஜர்களை இன்ஸ்டால் செய்துள்ளோம். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எதிர்காலம் எலக்ட்ரிக் தான் என்று ஆகிவிட்டது. அதற்கு ஆடி இந்தியா தயாராக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.