Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன ஆடு…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆடு திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டப்பாறை பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தட்டப்பாறை பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி அருகில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 3-ஆம் தேதி ஆட்டு கொட்டகையில் இருந்த ஆடு ஒன்று காணாமல் போனது. இதுகுறித்து கொம்பையா தட்டப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆடுகளை திருடியது தட்டப்பாறை பகுதியில் வசிக்கும் பூல்ராஜ் மற்றும் சுப்பிரமணியன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பூல்ராஜ் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான ஆட்டையும், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |