Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன ஆடுகள்…. பாதிக்கப்பட்டவர்களின் பரபரப்பு புகார்…. கைது செய்த போலீஸ்….!!

ஆடு திருடிய 3 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் காணாமல் போனதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில்  போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின்படி குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையிலான காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் நெல்லை சந்திப்பு பகுதியில் வசிக்கும் மீனாட்சிசுந்தரம், வள்ளித்துரை, விஜய்கணேஷ் ஆகிய 3 பேர் சேர்ந்து ஆடுகளை திருடி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும்  கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 9 ஆடுகளையும் கைப்பற்றி உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |