11 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிமுத்து என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பேச்சிமுத்து சொந்தமாக 80 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் பேச்சிமுத்து தனது ஆடுகளை கடந்த 7-ஆம் தேதி உடங்காட்டில் பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன்பின் மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது பட்டியில் அடைத்து வைத்திருந்த 11 ஆடுகளை திடுட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து பேச்சிமுத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குலசேகரபட்டினம் காவல்துறையினர் ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி வருகின்றனர்.