Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு…. அமோகமாக நடைபெற்ற ஆடுகள் விற்பனை…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் 4 மணி நேரத்திற்கு ரூ.1 1/2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

முஸ்லிம்களின் புனிதமான பண்டிகைகளில் தியாகத்திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் ஆட்டு இறைச்சியை ஏழைகளுக்கு தானமாக முஸ்லிம்கள் வழங்குவார்கள். இதனால் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும். இந்நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறையில் புகழ்பெற்ற கால்நடை சந்தையின் ஒரு பகுதியில் ஆடுகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

இதனால் முதல் நாளே சந்தையில் விற்பனை அமோகமாக இருந்தது. இதில் ஒரு ஆட்டின் விலை 10 ஆயிரத்திலிருந்து 45 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் ஒரு ஆட்டின் எடை, உடல் கட்டமைப்பு ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் ஆடுகளின் விலை உச்சத்தை தொட்டாலும் ஆடுவாங்க வந்தவர்களின் ஆர்வம் குறையவில்லை. மேலும் சுமார் 4 மணி நேரத்தில் 1 1/2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இதனால் ஆடுகளை விற்க வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |