தலீபான்கள் அனைவரையும் கொன்று வருவதாக ஆப்கானின் முன்னாள் உள்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறு குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று அனைவரையும் பாகுபாடின்றி தலீபான்கள் கொன்று வருகின்றனர். மேலும் இத்தகைய செயல் முறைகளினால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்ய முடியாது என்று முன்னாள் உள்துறை அமைச்சர் Masoud Andarabi கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதில் ” பாக்லான் மாகாணத்தில் உள்ள அந்தராப் கிராமத்தில் தலீபான்கள் தேவையின்றி அங்குள்ள வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
அங்குள்ள பொதுமக்களை கைது செய்து அவர்களை கொன்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு எதிராகவும் மக்கள் அவர்களின் உயிர், மரியாதை, கண்ணியம், மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும் போராட வேண்டும்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக உள்துறை அமைச்சராக இருந்த Masoud Andarabiயை ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபரான அஷ்ரப் கனி கடந்த மார்ச் மாதம் பதவிநீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.