Categories
உலக செய்திகள்

வன்முறையினால் புலம்பெயரும் மக்கள்…. உதவி வழங்க ஏற்பாடு…. தகவல் வெளியிட்ட ஐ.நா.சபை….!!

ஆப்கானில் புலம்பெயர்ந்தோருக்கு தேவையான உதவிகளை ஐ.நா.சபை வழங்க முடிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள மக்கள் அவர்களுக்கு பயந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்ந்து சென்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வன்முறைச் சம்பவங்களினால் மட்டும் 6.35 லட்சம் பேர் தங்களின் சொந்த வசிப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதநேய அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இவர்களில் 12000திற்கும் மேற்பட்டோர் பஞ்ஜஷீர் பள்ளத்தாக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் இதில் 1300 பேருக்கு உதவிகள் தேவைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர குனார் மாகாணத்தில்  9300க்கு மேலான மக்கள் வன்முறை மற்றும் தாக்குதலினால் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஐ.நா.வின் அகதிகள் கழகம் நிவாரணம் வழங்கியுள்ளது.

இதனையடுத்து வார்தக் பகுதியில் உள்ள 63000 பேருக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன. மேலும் வருகின்ற அக்டோபர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி வரை பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு  உலக உணவுத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்கள் அளிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |