ஆப்கானிஸ்தானை ஆளப்போகும் தலீபான்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஞாயிறுகிழமை அன்று தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சென்றுள்ளது. மேலும் ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்றம் போன்ற அரசு அலுவலகங்களை அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். தற்பொழுது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் பொறுப்பிற்கு ஏழு முக்கிய தலீபான்கள் வரப்போகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் முதலாவதாக தலீபான்களின் தளபதியாக கடந்த 2016 இல் இருந்து பொறுப்பு வகிப்பவர் Haibatullah Akhundzada. இவர் இதுவரை பொது வெளியில் காணப்பட்டது இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்ததாக Abdul Ghani Baradar உள்ளார். இவர் தலீபான்கள் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான முல்லா முகமது ஒமர் மற்றும் ஒசாமா பின்லேடனுடன் நெருங்கிய தொடர்பு உடையவர். இவர் 2018ல் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் கூட்டு முயற்சியினால் சிறை பிடிக்கப்பட்டார். ஆனால் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பின் அமைதிப் பேச்சுவார்த்தையின் காரணமாக விடுவிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து 2020ல் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் அரசாங்கத்துடன் Baradar அமைதி பேச்சுவார்த்தையில் மீண்டும் ஏற்பட்டதன் காரணமாக தான் அமெரிக்காப் படைகள் வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அடுத்து மூன்றாவது தலைவராக Sirajuddin Haqqani இடம் பெறுகிறார். இவரது அமைப்பினர் 2016ல் தலீபான்களுடன் இணைந்த பின்னர் இரண்டாவது பெரிய தலைவராக ஆனார். இவர் தலீபான்களுக்காக நிதி திரட்டும் பணியினை செய்வார். இவரை தொடர்ந்து நான்காவதாக முல்லா ஓமரின் மகன் Mohammad Yaqoob உள்ளார். இவர் சில தகவல்களை மட்டுமே வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து Abdul Hakim Haqqani தலீபான்களின் பேச்சுவார்த்தை குழுவிற்கு பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னாள் அமெரிக்கா அதிபரான ட்ரம்ப் ஆட்சி காலத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர். இவரை பின்பற்றி 6 வது தலைவராக Sher Mohammad Abbas Stanikzai உள்ளார். இவர் ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர். மேலும் தலீபான்கள் ஆட்சி காலத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் மட்டுமின்றி பல உலக நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.
இறுதியாக தலீபான்களின் முதன்மைச் செய்தி தொடர்பாளரான Zabihullah Mujahed இடம் பெறுகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளில் தொலைபேசிகள் மற்றும் குறுந்தகவல் மூலமாகவே ஊடகங்களுக்கு தொடர்புகளை தெரிவித்துள்ளார். ஆனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு கடந்த 17 ஆம் தேதி அன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற முதல் செய்தி மாநாட்டில் வைத்து ஊடகங்களுக்கு தனது முகத்தை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.