Categories
Uncategorized

‘நீடிக்கும் பதற்றமான சூழ்நிலை’…. பெண் தொழிலதிபரின் பயண அனுபவம்…. காணொளி வெளியிட்ட ஹசினா சையத்….!!

பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்ற அனுபவம் குறித்து பெண் தொழிலதிபர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி விமானம் மூலம் மற்ற நாட்டிற்கு தப்பி செல்கின்றனர். இதுவரை காபூல் விமான நிலையத்தில்  12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் தலீபான்களினால் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதை அறிந்து அரசியல் ஆர்வலரும் தொழிலதிபாருமான ஹசினா சையத் பிரித்தானியாவிற்கு விமானம் மூலம் தப்பிச் சென்றார். இதனை அடுத்து தப்பிச் சென்ற அனுபவம் குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எனக்கு தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதாக அழைப்பு வந்தது.

அப்பொழுது நான் என் காரில் ஓட்டுநருடன் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தேன். நான் என்னுடன் ஒரு சிறிய பையையும் பயணத்திற்கு தேவையான ஆவணங்களையும் மட்டுமே கையில் வைத்திருந்தேன். வேறு எதையும் எடுத்து செல்லவில்லை. எனது ஓட்டுநர் சாலையிலேயே என்னை விட்டுவிட்டு அங்கிருந்து ஓட வேண்டிய சூழ்நிலை உருவாகியது” என்று கூறினார். மேலும் இந்த பதற்றமான சூழ்நிலையானது அங்குள்ள ஒவ்வொரு ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும். அதிலும் ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் இன்னும் மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |