ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதை அடுத்து அங்கிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர். இதனையடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் தலை தூக்கியது. இதனை தொடர்ந்து அவர்கள் பல்வேறு முக்கிய நகரங்களை கைவசப்படுத்திய நிலையில் தற்பொழுது தலைநகரான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பதவியிலிருந்து விலகி ஆப்கானிலிருந்து வெளியேறியுள்ளார் என்று தகவல்கள் வெளி வந்தது.
இவரை தொடர்ந்து துணை அதிபரான அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் இடைக்கால அதிபராக அலி அகமது ஜலாலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தி வருகிறது. அதில் ஆப்கானின் தற்பொழுது நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது . இந்த ஆலோசனைக் கூட்டமானது இன்று காலை 10 மணியளவில் தொடங்கியுள்ளது. இதில் ஐ.நா.பொதுச் செயலாளரான அண்டனியோ குடாரெஸ் உரையாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.